மோக முள்

கடலலைத் தழுவும்
மரக்கிளை நிழலில்
உடலதுத் தழுவ
நித்தமும் நினைத்தேன்
இதழதன் சுவையை
நித்தமும் சுவைக்க
தனியிடம் நாடி
நிலவினை அடைந்தேன்
பகலவன் மூழ்க
இருளதன் துணையில்
அகத்திணை தேடி
இடைதனை கடந்தேன்
உடையதன் தடையை
உடைத்தெறிந்த பின்பு
மடையதன் மதுவை
திறந்தே வீழ்ந்தேன்

எழுதியவர் : (28-Mar-17, 3:23 pm)
Tanglish : moga mul
பார்வை : 163

மேலே