ஒரு குடை கீழே
ஒரு குடை கீழே
தோளோடு வந்தாளே
விளையாட்ட ஏதோ சொன்னாளா
விதையத்தான் போட்டு சென்றாளா
கனவயே தூக்கி சென்றாளா
கதயத்தான் முடிச்சு போனாளா
நெருங்கி நெருங்கி பழகியும்
கடலலயை விலகி போகச் சொன்னால்
கரை என்ன தான் செய்யுமோ
விலகி எங்கே செல்லுமோ.....
தாவணியோடு காத்தாடியா மனசு
கூத்தாடி விழுந்தாச்சு
ஆவணி பொழுதில பேசின பேச்சு
ஐப்பசியில் பொய்யாச்சு
கரும்பு காட்டுக்குள்ள
எரும்பா மனசு
திரிஞ்சதெல்லாம் கசப்பாச்சு
அரும்பு மீசையிப்ப காடா வளந்து
தேவதாசு கதயாச்சு
சுத்தி சுத்தி வந்த மேகத்த நிலவு
விலகிபோகச் சொன்னால்
வானம் என்ன தான் செய்யுமோ
விலகி எங்கே செல்லுமோ
உதிர்ந்தும் வீசிய வாசத்த பிரிக்க
பூவோடு கலந்தாச்சு
உரசி பார்த்து தான் காதல ரசிக்க
வியாபார பொருளாச்சு
அறியாத வயது புரியாத காதல்
புரிஞ்சதும் புண்ணாச்சு
ஆளம் தெரியாம ஆசையில் விழுந்து
ஆயுள் கைதி ஆயாச்சு
சுத்தி சுத்தி வந்த நிமிடத்தை இன்று
விலகி போக சொன்னால்
நாளை என்னா தான் செய்யுமோ
நினைவு எங்கே செல்லுமோ