வானம் தொடு

ஸ்மார்ட் போன் வாங்கிப் பார்
ஸ்மார்ட்டாகும் வாழ்க்கைப் பார்
தொட்டுப் பார் தேய்த்துப்பார்
புதிய உலகம் தெரியும் பார்
நட்பு வட்டம் பெருகும்
தொல்லையும் தொடரும்
உறவுகள் தூரமாகும்
உலகம் உள்ளங்கை வசமாகும்
பேஸ்புக்கில் லைக் கிடைக்கும்
வாட்ஸ்அப்பில் வாழ்க்கை தொடரும்
போனை தொலைத்துப் பார்
காதலியை இழந்தது போல புலம்புவாய்
தொட்டா சிணுங்கியாய் சுருங்கி விடாதே
தொடுதிரைக்குள் வாழ்க்கையை
தொலைத்து விடாதே!
இளைஞனே வெளியில் வா
வானம் தொட்டு விடும் தூரம்தான்...

எழுதியவர் : லட்சுமி (28-Mar-17, 7:17 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 128

மேலே