சின்ன சின்ன ஆசை
சின்ன சின்ன ஆசை
சிறகடிக்க ஆசை
சுத்தமான ஊரில்
குடியிருக்க ஆசை
லஞ்சமே வாங்கா
அரசு ஊழியர்
பார்க்க ஆசை
விதிகளை மீறா
மனிதர் காண ஆசை
சமமான கல்வி
சரிசமமாய் குழந்தைகளுக்கு
கிடைத்திட ஆசை
அனைவர்க்கும் மருத்துவம்
அரசாங்கம் இலவசமா(ய்
அளித்துவிட ஆசை
வீதிகள் தோறும்
மரங்கள் நட ஆசை
புகையில்லா ஊரை
வியந்து பார்க்கஆசை
விவசாயி முகத்தில்
புன்னகை பூத்திட ஆசை
இலவசம் வெறுக்கும்
மக்கள் மத்தியில்
உயர்வாய் வாழ ஆசை
தண்ணீர் கொட்டும்
குழாய் காண ஆசை
படித்தவர் மட்டும்
தேர்தலில் போட்டியிட ஆசை
கலப்பட அரசியலை
களைந்துவிட ஆசை
ஊழல் செய்யும்
ஊழல்வாதிக்கு
ஓட்டுப் போட்ட மக்கள்
சாட்டையடி கொடுக்க ஆசை
தன்னலம் மறைந்து
பொதுநலம் பூக்க ஆசை!
சின்ன சின்ன ஆசை
சிறகடிக்க ஆசை!