ஒரு அப்பாவின் கடிதம் பிறக்க போகும் குழந்தைக்கு

தவம் செய்ய நானறியேன் நீ இன்றி
ஒரு சவம்போல வாழ்கிறேன்
என்று ஜனிப்பாயோ என்ற ஏக்கம்
எனக்கும் உன் தாய்க்கும் ????

விடிகிறது தினமும்
முடிகிறது என் கனவும் இரவும்

நீ கையில் தவழ போகும் அந்நாள்
உன் பிறந்தநாள் மட்டுமல்ல
எனக்கும்தான் ஆம்
அன்றுதான் நான் மீண்டும் பிறப்பேன்

அதுவரை என் மனைவி என் குழந்தை
அவள் பேசும் மொழி நான் ரசிக்கும்
புதுக்கவிதை என்றும் என் மனதில்

என் எல்லா கனவுகளும் பத்திரமாய்
உனக்காக ....
சீக்கிரம் வா
வாடுகிறது என் கனவுகள்

யார் யார் குழந்தையோ
என்னை வாஞ்சையோடு
பார்த்து சிரிக்கையில் நினைத்துக்கொள்வேன்
நிச்சயம் இதைவிட உன் சிரிப்பு
அழகு என .......

வீதியோரம் விளையாட்டு பொம்மை
விற்போரை கண்டால்
அத்தனையும் வாங்க தோணும்
நீ இல்லாது யாரிடம்
அவைகளை சேர்க்க ....

நான் ஒரு கவிஞன்
உன் தாயால் ஆக்கப்பட்டவன்
நீயும் வா என்னை மாற்ற
நிச்சயம் மாறுவேன்
ஒரு நல்ல கதை சொல்லியாக

கடல் அலையில் ஓடி பிடித்து விளையாடி
மணலில் வீடு கட்டி ...
யாரோ அதை கலைக்க நீ அழ
உன்னை கண்டு நான் அழ
நம்மை கண்டு உன் தாய் அழ

இன்னும் உண்டு ஆயிரம் சொல்ல
வருவாயா சீக்கிரம்
ஏன் இந்த தாமதம்
காக்க வைத்தது போதும்
தீரட்டும் உன்னால் என் சோகம்

தோள்கொண்டு காத்திருக்கிறேன்
உன்னை தாலாட்ட
இப்படிக்கு உன் அப்பா .......

எழுதியவர் : ருத்ரன் (28-Mar-17, 7:53 pm)
பார்வை : 413

மேலே