மனமே நல்வழிப்படு

வலி தந்து வலியோடு வந்தோம் வாழும் இவ்வுலகிற்கு...

வாழ வழிகள் தேடுகையில், பற்பல வழிகள் கண்டு எங்கெங்கோ சுற்றித் திரிந்து கடைசியில் நுழைகிறோம் மரண வாயிலில்....

சில வழிகளைக் கண்டும் பல வழிகளைக் காணாதும்
சில விருப்பங்களை நிறைவேற்றியும் பல விருப்பங்களை நிறைவேற்றாமலும் வாழ்க்கை முடியும் தருவாயில், எண்ணங்கள் தோன்றும் அப்படி வாழ்ந்திருக்கலாமோ?
இப்படி வாழ்ந்திருக்கலாமோ? என்று....

தனியளாய் வாழ்ந்தாலும் தனித்துவமாய் வாழ்வதற்கு என்றும் தயங்காதே மனமே....

கண்ணிருந்தும் குருடராய் போகும் பாதையில் படுகுழி உள்ளதெனத் தெரிந்தும் குழியில் வீழ்ந்து விழிபிதுங்கி வாடாதே மனமே....

அழகாகத் தொன்றுமே வெளித்தோற்றம்...
உள்ளே சென்று பார்த்தால் யாவும் நரகத்தோற்றம்...

அதிக அழகை நாடாதே மனமே...
அமைதியிழந்து ஆபத்தை நாடி தூக்கமிழந்து காவல்காரனாவாய்
எந்நாளும்...

அதிக செல்வத்தை நாடாதே மனமே....
குவியல் குவியலாய் செல்வமிருந்தால் அதை பாதுகாக்கும் காவல்காரனாவாய்....
எண்ணிப் பார்த்து ஆனந்தம் கொண்டாலும் அது நிலைக்கப் போவதில்லை எந்நாளும்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Mar-17, 6:55 pm)
பார்வை : 616

மேலே