உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
என்பதோர் அருமை முதுமொழி
இன்றைய உலகு சந்தர்ப்பவாதிகள்
நிறைந்து வழியும் உலகு
இங்கு இந்த முதுமொழியை போதித்தால்
இந்தவிடைதான் கிடைக்கும்
அது என்னவென்றால்,
"உப்பிட்டவரை நினைக்கத்தான் செய்தேன்
அந்த உப்பின் ருசி இப்போது நாவில்
இல்லையே " என்று நா கூசாமல் சொல்வர்
நன்றி ஏதும் இல்லாமல் ,
இதுதான் பழையன கழிதல்
புதியன புகுதலின் புதுக் கோலமா ?
அல்லது இன்றைய வாழ்க்கையில்
இது ஒரு எதார்த்தமா ? தெரியலையே
பொய்யும் மெய்யாய் தோன்றும்
இன்றைய உலகில் !
,