மழலைச் செல்வம்

தினம் தினம் ! புதிதாய் பூத்த ரோஜாவைப் போல்
உனைக் கண்டு பூரிப்படைகிறேன் என் கண்ணே...!
குழையகுழைய நீ பேசும் மழலை மொழியை கேட்டு
மனம் நெகிழ்ந் தே போனதடா என் செல்லமே...!
தத்திதத்தி! நடைபழகும் உன் நடையழகை கண்டு
இன்பக்கடலில் மூழ்கினேனடா என் தங்கமே ...!
முத்துமுத்தாய்! இருக்கும்உன் முத்துப்பல் சிரிப்பினை பார்த்து
முத்த மழை பொழிவேனடா என் முத்தே...!
நித்தநித்தம் நீ செய்யும் செல்லச் சேட்டைகளை கண்டு நான்
அடையும் ஆனந்தத்திற் க்கு அளவே இல்லையடா என் உயிரே....!!