சொந்தக்கவிதை 137 மௌனம் எனும் ஆயுதம்

மௌனம் எனும் ஆயுதம்
மௌனம் சக்திவாய்ந்ததோர் ஆயுதமாம்
எடுத்தவர் என்றும் வீழ்ந்தவரில்லை
வெகுண்டவர் என்றும் அறிந்தவரில்லை
உணர்ந்தவர் என்றும் மறப்பவரில்லை
மௌனம் கண்ணீருக்கு தெரியாது போனதினால்
வழியறியாது நிலமகளை தஞ்சம் அடைந்ததுவே
கோபத்தில் வெடித்துச் சிதறிய வார்த்தையும்
அனலாய் உள்ளத்தை வாட்டியதே மௌனமாய்