திருநங்கை

ஆண்டவண் கூட அரசாங்க ஊழியன் போலும்,தன் அறைகுறைப் பணியால் 
அவர்களை அரவாணியெனப் படைத்துவிட்டான்!!.


ஆண்பாலுமில்லை, பெண்பாலுமில்லை
மூண்றாம் பாலாய் முளைத்த அதிசயப் பிறவிகளே திருநங்கைகள்.அவரக்ளே ஆண்மகள்கள்!.


ஆண்மையில் ஓர் பெண்மை ,
பெண்மையில் ஓர் பேராண்மை
காட்டி கலியுகக் கண்ணிகளாய்ச்
சுற்றித் திரியும் கண்ணன்கள்.


பெற்றெடுத்த பெருமக்களே புறந்தள்ளிப் போட, அவர்கள் பிழைக்கத் தெரிவு செய்ததோ ,
உலகின்  பழமையான தொழில்.


இன்றளவும் இந்த இருமுகன்கள்
போராட்டம் தொடர்கிறது .இந்த
ஆண்பெண் சமூகத்தில் அவர்களுக்கான அடிப்படை அங்கீகாரத்தைத் தேடி. . . . . .

எழுதியவர் : (30-Mar-17, 12:05 am)
சேர்த்தது : nithinm222
Tanglish : thirunangai
பார்வை : 90

மேலே