இப்படிக்கு மனசாட்சி
கல்லையும்
மண்ணாய் உடைத்து ,
காலமெல்லாம்
பயிரிட்டு ,
உடலை வியர்வையால்
மெலிர்த்து,
தள்ளாடி தள்ளாடி
வீடுபோய் சேரும்பொது ,
உணவுப்பானையில்
ஒரு கை அரிசிகூட இல்லை !
பசியடக்க ,
உணவுத்தேடி ,
வெளியில் போனால்
புர்களுக்குகூட பஞ்சம் போலும் ,
வெறுத்து திரும்பிய
உழவனுக்கு ,
எளிக்கரிகூட அமிர்தமாய் !
விலங்குக்காக போராடும் மனிதா
மனிதனுக்காக கொஞ்சம் போராடு ,
உன்னிடம் மீதமுள்ளதை
கொஞ்சமாவது உழவனுக்கும் கொடு
மனிதனும் வளருவான் ,
மனிதநேயமும் வளரும்!
இப்படிக்கு மனசாட்சி !