நிலவுக்கு நூலேணி

வானவில்லுக்கு
ஏணி வைத்தேன்
தொடுமுன் கலைந்து போனது !
வான் நிலவுக்கு
நூல் ஏணி வைத்தேன்
எட்ட முடுயவில்லை !
நூலேணி ஏன் வைக்கிறாய்
நூலில் என்னை ஏற்றி வைத்து எழுது
என்று சிரித்தது நிலவு !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-17, 7:18 pm)
பார்வை : 257

மேலே