பதிலைத் தேடுங்கள்

ஓழுக்கக்கேட்டை ஊக்குவிக்கும் மானிடர்கள் உருவாக்கிய சிவனின் சிலைக்கருகில் பார்வதி மனைவியாய் வீற்றிருக்க, சிவனின் தலையில் கங்கா சிரிக்கிறாள்!...
என்றே கூறி கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்யும் கூட்டமே அதிகமாகி சமுதாயத்தை அழைத்துச் செல்கையிலே,
பகுத்தறிவு உள்ளோர் வெகுண்டெழுந்தே,
ஒழுக்கமில்லா வாழ்வை ஆதரிக்கும் கடவுளே இல்லையென விழிப்புணர்வு பரப்பவே,
காலப் போக்கில் மாறுப்பட்டு, கடவுளே இல்லையென்றாகி,
கட்டிய மனைவியின் தாலியை அவிழ்த்து, கண்டபடி வாழ்வதற்கே வழிவகுத்து,
அன்பை அரிதாக்கி, காமத்தைப் பெரிதாக்கி,
சுற்றமெல்லாம் அதையே பரப்ப, உருவாகியது இந்த ஒழுக்கமில்லா சமுதாயம்....

இயற்கையே தெய்வமென்று ஆரவாரம் பலரெழுப்ப,
இயற்கையையும் கல்லென பழித்தே,
வெறுத்து ஒதுக்கியது இந்த சமுதாயம்...

நீரின் ஆதாரமென்ற மரங்களையே கொலை செய்து விற்றே தன் பணநலம் பேணி,
கட்டில், நற்காலியென ஆடம்பரத்தை நாடியதாலே,
இயற்கையை நம்பிய கூட்டமெல்லாம் பரிதவித்தே நிற்கிறதே, இந்த சமுதாயத்தில்....

பூமித்தாயின் மீதே கால் பதித்து நடக்கும் இந்த மானிடன் மண் தரையிலே அமர்தலும் இழுக்கென்று எண்ணம் கொள்வது தான் அறிவுடைமையா???...

பதிலைத் தேடு...
அறிவின் தெளிவை நாடு.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Apr-17, 6:36 pm)
பார்வை : 2506

மேலே