இதுதான் வானவில்லா
வானவர்க் கோன் வானில் பவனி வர
அவனை வரவேற்க தன
ஏழு குதிரைகள் பூட்டிய மாரதத்தில்
அவன் எதிரே வந்தடைந்தான் ஆதவனும்
ஏழு நிறங்கொண்ட அவன் குதிரைகள்
ஏழு வர்ண கிரணங்களாய் எழும்பிட
அங்கு தேவேந்திரனுக்கு
வில்லொத்த பெரும் மாலைகளாய்
அவன் நீண்ட கழுத்தை அலங்கரித்தனவோ
வர்ணஜாலமாம் வானவில்லாய்
மேல்வானில் !