ஆவலில் மனம்

ரொம்பநாளுக்கப்பாறம்
தரைவழித் தொலைப்பேசி வழி ஒரு அழைப்பு
பகுதிக் குறியீடு பார்த்தப்போ
யாரா இருக்கும் என்கிற யோசனை
முதல் அழைப்பு துண்டிக்கும்வரை எடுக்காமல் விட்டுட்டேன்
முழு எண்ணைப் பார்த்த பெறவு
கால் பண்ணிக்கலாம்
இல்லேன்னா மறுக்கா கால் வரும்போது
எடுக்கலாமுன்னு
எண்ணைப் பரிசோதித்துப் பார்க்கிறபோது, சரியாக தட்டுப்படவில்லை
யாருடைய எண்ணாக இருக்கும் ன்னு
ஒரு இருபது நிமிஷத்துக்குப் பின்ன
அந்த எண்ணிற்கு அழைப்பூட்டிப்பார்க்கிறேன்
மூன்றாவது மணி அலறலில்
பெறுவி எடுக்கப்பட்டது
ஹெலோ என்ற என் முனையையடுத்து
மறுமுனையில்
நா இன்பராஜ் பேசுறேனுங்க சார் என்ற க்ரீச் குரல்
நினைவு சலவை செய்துப்பார்க்கிறேன்
புலப்படவில்லை
சொல்லுங்கப்பா என்றேன் மாறாக் குழப்பத்துடனேயே
நம்ம தோட்டத்துல
சேர்ந்துக்கறேனுங்க சார், ரோட்டுவேலை நம்பூருல முடிஞ்சதுங்க சார்
இங்க விட்டு எங்கயும் போக
மனசு வர்லை சார்
சரின்னு சொன்னா தோட்டத்துக்கு மாறிக்கறேன் சார்
இப்படியே விழும் ஈணலயம்
ரொம்ப பழக்கப்பட்டதுதான் இருந்தும் புலப்படவில்லை
சரி நாளைக்கு கூப்பிடு, சொல்றேன் பா
என்றுவிட்டு அணைப்பை துண்டித்துவிட்டேன்
இதய அளவை வார்த்துக் கொண்டிருக்கின்ற
இந்த சப்தத்தின் ஏக்கம்
இதுக்குமுன்னால் எப்போதாவது உணர்ந்திருக்கிறேனா??
அலசுகிறேன்,
இந்த பெயர்
இந்த மொழி
கண்களும் அயர்ச்சியும்
படுக்கை ஆளலாம் என்ற பொழுதை வெட்டி எடுத்துவிட்டது
நினைவிற்கு வந்தபோது
மீண்டும் அழைக்கிறேன்
அது எங்கள் ஊர் நபரான ஜெகநாதன் தேநீர்க்கடையின்
தொலைப்பேசி எண்
இன்பராஜ் போய்விட்டிருந்தான்
ஜெகநாதனின் குசலத்தில், லயிக்கவில்லை
சமாளிக்கிறேன்,
நாளை இன்பராஜை இடைப்பகல் வேளையில்
காத்திருக்கும்படி சொல்லிவிட்டு
வைத்துவிட்டேன்
நாளைக்கு இன்பராஜ் வருவானா,

ஆவலில் மனம்

எழுதியவர் : அனுசரன் (4-Apr-17, 4:37 pm)
Tanglish : aavalil manam
பார்வை : 251

மேலே