விவசாயம் அழிஞ்சி போச்சி

பல்லவி:

பெ: விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க பொழுப்பும் காய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
ஐயநாரே காப்பாத்து

ஆ: விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க குடும்பம் சாய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
ஐயநாரே காப்பாத்து

சரணம்1:

பெ: கரிசல் காட்டு நிலமும் கூட
வெடிச்சே போச்சி
சோலகொள்ளை பொம்ம இப்போ
ஒடைஞ்சே போச்சி
ஆ: விவசாயி விடியலத்தான்
தேடி தேடி ஒடிவந்தான்
அது கிடைக்காம
படையலுக்கு உசுர விட்டான்

பெ: தண்ணியத்தான் தேடி தேடி
ஓடி வந்தோம் நாங்க
அது கெடைக்காம விவசாயம்
காஞ்சி போச்சி தாங்க
வெளிநாட்டுகாரன் தண்ணிய விக்க
பார்த்து நின்னோம் நாம

ஆ: விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க குடும்பம் சாய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
ஐயநாரே காப்பாத்து

சரணம்2:

பெ: அரசாங்கம் கண்டுக்கல
முதுகெலும்பா நாங்க
அடுக்கடுக்கா வீழ்ந்து போச்சு எங்க உசிருதாங்க
விவசாயம் காப்பாத்த  கையகொடுக்கனும் நீங்க

ஆ: இளைஞா நீ எங்களையும் திரும்பிபார்க்க வேணும்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில
பேசமறுப்பதேனோ

பெ:இயற்க்கை வளம் நாம காக்க
போராட வேணும்
நெடுவாசல் மக்கள் குறை கேட்க வேனும் நீங்க

ஆ:ஊடகத்தில எங்கள பாத்து ரசித்தெல்லாம் போதும்
கடனனுக்காக நாங்க உசிர விட்டதெல்லாம் போதும்

பெ: ஒவ்வொரு வேளை சாப்பாட்டுல
எங்க உழைப்ப ருசிக்கிறிங்க.

ஆ: விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க குடும்பம் சாய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
ஐயநாரே காப்பாத்து

பெ: விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க பொழுப்பும் காய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
ஐயநாரே காப்பாத்து

எழுதியவர் : சிவசக்தி (4-Apr-17, 10:46 pm)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 252

மேலே