வறட்சி ஏற்படக் காரணம் யார்

பகல் முழுவதும் சூரியனின் உக்கிரம் சிறிதும் தணியாது உடல் நீரை வியர்வையாக்கி, ஆவியாக்கி உறிஞ்சியெடுக்க, குடிதண்ணீர் கிடைக்குமா? என்றே தேடி குடிநீர்க் குழாயைக் கண்டதும் ஓடிச் சென்றே திறக்க வெளிப்பட்டது,
அளவில்லா காற்று..

தண்ணீரே தாகம் தீர்க்கும்..
தண்ணீருக்கு மாற்றாகக் காற்றையா குடிக்க முடியும்? என்றே சிந்தையில் மூழ்க நாவறட்சி மேலோங்க, உமிழ்நீரைத் திரட்டி முழுங்கிக் கொண்டே குடிநீர் எங்கே?,
குடிநீர் எங்கே??,
என்றே நானும் கவிப்பாடித் திரிய,
தண்ணீரின் விலை தங்கத்தின் விலையை விட பத்து மடங்கு என்றே வியாபாரம் செய்யும் கூட்டமும் மனிதரில் இருப்பதைக் கண்டே கண்ணில் இருந்தே நீரும் வர, சுவைத்துப் பார்த்தேன், உப்புக் கரித்தது..

ஏனடா இந்நிலை வந்தது யாராலே?..
என்றே கோபமாய் கேட்க, அட முட்டாள் கவிஞனே! தாயின் அன்பு கிடைக்கையில் அதன் மதிப்புணரா மடையனாய் எள்ளி நகையாடி ஏதேதோ தேடிச்செல்வதைப் போலே, தண்ணீர் கிடைக்கையில் அதன் அருமையுணரா மதிகெட்டானாய் யாவற்றையும் வீணாக்கி, இயற்கையை மறந்து சேயற்கையை மேலே தூக்கி வைத்து வாழ்ந்தாயே..
என்றே சட்டென மனச்சாட்சி விழித்துரைக்க,
" ஆம், மனிதர்களாகிய நாமே காரணம். ", என்றுணர்ந்தே தலைகுனிந்தேன்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Apr-17, 6:52 pm)
பார்வை : 1493

மேலே