பருவமடைந்தது என் தவறா

உன்துயரம் துடைக்க நானிருக்கேன் என்பதில் மயங்கினேன் அவனிடம்...
ஆதரவற்ற எனக்கோ அவன் மட்டுமே ஆறுதல் அன்று...
சிறுசிறு செய்கையிலே நான் விழித்திருந்தாள் இன்று இந்நிலை நேர்ந்திராதோ...
பாவி மனசு அனைத்தும் அன்பென்றே தடுக்க மறுத்ததே...
கேட்டது கிடைத்தும் எனக்கு விளங்கவில்லை கேளாவொன்று என்னை வந்தடையுமென்று...
காலமும் ஓடியது
பருவமும் அடைந்தேன்
பட்டுத்தாவணி உடுத்தியதும்
எங்கிருந்து பிறந்ததோ அந்த வெட்கமொன்று அறியவில்லை...
காதலும் பிறந்தது அவன்மேல்...
அன்று கூட தெரியவில்லை
அவன் காமத்திற்கு என்தேகம் இறையாகுமென்று...
கண்மூடியே அவன்பின்னே பயணித்தேன்...
என்னை ஓரிடத்தில் விட்டுச்சென்றான்...
பசிக்கும் மானத்திற்கும் இடையேயான சண்டையில்
வயிற்றுப்பசி வென்றது அவ்விடத்தில்
இழக்க கூடாத அனைத்தையும் இழந்தேன் - வருடங்கள் ஓடின
கண்விழித்தேன் என்தேகத்தில் அத்தனை கரங்கள்...
இருளே வாழ்வென ஆகியதும்
என் வாழ்வே இருட்டாகியது...
அந்த விபச்சார விடுதியில்....
எழுத்து சே.இனியன்..