இதற்கு தானே ஆசைப்பட்டாய் இனியவனே
இதயத்தின் துடிப்பு ஏன் இப்படி இரட்டிப்பாய் துடிக்கிறது !
இதயத்தின் ரத்த ஓட்டம் அசுரவேகத்தில் ஓடுகிறது !
இமை சிமிட்டல்கள் இயல்பானதாய் இல்லை !
இங்கும் அங்கும் விழி பார்வை நோட்டம் விடுகிறது !
இப்பொழுது மட்டும் ஆண்மை வெட்கம் கொள்கிறது !
இத்தருணத்தில் இது கிடைத்திடுமா !
இதோ என் இதயமானவள் இனிப்பாய்
ஒற்றை" முத்தம் " தரப்போகிறாள் !
"முதல் முத்தம் " பெறப்போகிறேன்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் !!!
இனியவனே !
இறுதியில் அவள் சொன்னது
அடுத்த கவிதைக்கான முதல் வரியோ ?

