மனிதா நீ மனிதனாக இன்னும் வளர வேண்டும்
மலையின் பிம்பம் தண்ணீரிலே தெரியக் கண்டு, ஏதோ சிந்தனையில் நிலைத்தவனாய்,
மனிதனுள் தோண்டிப் பார்த்தேன், " யாரிந்த மனிதன்? ", என்றே...
மனிதனொரு பயங்கரமான விலங்கு, கண்ணில்பட்ட யாவற்றையும் புசித்து, ருசிக்க நினைப்பதாலே...
மனிதனொரு சந்தேகப் பிராணி..
காதலிலும் நிலைத்திருக்காமல்,
கடவுள் இடத்தும் உண்மையான நம்பிக்கை கொள்ளாமல், கட்டிய
மனைவியையும் சந்தேகம் கண்ணோடு நோக்கி,
உள்ளத்தூய்மையும், அன்பையும் தொலைத்துத் திரிவதாலே, மனிதனொரு சந்தேகப் பிராணி..
தானொரு ஆன்மிகவாதியென்பான் தானொரு ஆன்மா என்பதை உணராமல்...
கடவுள் இல்லை என்று மறுப்பதையே பகுத்தறிவு என்பான்,
தன்னில் பகுத்தறிந்து செயல்பட வேண்டியவற்றை எல்லாம் மறந்து....
ஆசை, கோபம், களவு கொண்டு, உடலை ருசித்து, உயிரைப் பறிக்கும் மனித விலங்கே, நீ முழுமனிதனாவது எப்போது???..
சாதி, மதங்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை என்று மனித மனங்களுக்கு அளிக்கப்படுகிறதோ,
அன்றே மனிதா நீ மனிதனாக வளர்ச்சியடையத் தொடங்குகிறாய்..
உருவம் கண்டோ, உடை கண்டோ என்று மதிப்பிடாதே..
ஒளிந்திருக்கும் திறமை வெளிப்படும் போது, உனது மதிப்பிடுதல் முழுவதுமே தவறாகவே இருக்கும்...
சஞ்சலமே சந்தேகத்தின் பிள்ளை தான்....