உயிராக நீயிருந்தால்
கண்ணுக்குள் விழுந்திருப்பது
தீத்தனல் தான்
ஆனாலும் படித்திடுவேன்
கவியாக நீயிருந்தால்
இதயத்தில் குத்தியிருப்பது
குண்டூசி தான்
என்றாலும் துடித்திடுவேன்
உயிராக நீயிருந்தால்
இளகிய மெழுகாய் என் மனம்தான்
இருந்தாலும் உருகிடுவேன்
சுடராக நீ ஒளிர்ந்தால்
காட்சிக்கு நானோர்
கருங்கல்லாய் இருந்தாலும்
சிலையாக வடிக்கலாமே
சிறு உளியாக நீயிருந்தால்
மண்ணே நான்என்றாலும் அதில்
சிற்பங்களாக்கலாமே
கை விரல்களை நீயிருந்தால்
குப்பை மேடேயானாலும் அதை
கோபுரமாக்கலாமே குல
தெய்வம் போல் நீ அமைந்தால்
இதையெல்லாம் விடுத்து எனை
வெறும் சாம்பல் ஆக்கிவிடாதே
எமனாக நீயிருந்து!!!