கவியும் மொழியும்

கவியே..
கவியின் கனியே..!!
தனியே..
உன் விழி வழியே..!!
வந்தது காதல் பிணியே..

கவியே!
என் கனியின் குரலில் கவி் அழகே..

செவியே!
தொங்கும் தோட்டத்தின் அதிசயம் செவியழகே..!!

இதழே!
செவ்விதழில் பேசும் மொழியில் இதழழகே..!!

சுவையே!
மது தரும் பெண்ணின் சுவை அழகே..!!

விழியே!
காதல் பார்வையில் கண்ணின் கயல்விழியழகே!

இமையே!
மயில் இறகில் மென்பதத்தின் இமையழகே..!!

கனியே!
கனியும் பழத்தின் நிறத்தில் பெண்ணினம் அழகே..!!

அழகே!
செம்மேனியில் அணியும் உடையழகே
மொத்த செந்தமிழின் அழகே..!!

எழுதியவர் : மணிபாலன் (5-Apr-17, 11:19 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
Tanglish : kaviuyum mozhiyum
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே