நீ எங்கே என் அன்பே

இன்ப சிலையாக வந்தென்னை கவர்ந்தாளடா
என் உயிரோடு உயிராக கலந்தாளடா
விழியோடு கதைபேசி சென்றாளடா -அவள்
விதி செய்த விளையாட்டில் பிரிந்தாளடா!
நீயின்றி என் வாழ்வு தொடராதம்மா
நிலவின்றி இரவு என்பது அழகாகுமா?
உன் வருகையை எதிர்பார்த்து இருப்பேனம்மா
உன்னைப் பிரிந்திங்கு வாழ்வது முடியாதம்மா!