புதியதோர் புரட்சி செய்வோம்
எத்தனையோ கவிஞர்கள் ஏழ்மையைக் கவிதையாய் பாடினாலும்,
எத்தனையோ கலைஞர்கள் வறுமையைக் காட்சியாய் வடித்தாலும்,
நிலைமை இன்னும் மாறல....
இந்த உலகம் திருந்தமென்றும் தோனல....
சுற்றியிலும் தேங்கி நிற்குது சாக்கடை...
மனதிலும் பூத்திருக்குது பூக்கடை....
வசிப்பதோ தென்னை ஓலையால் செய்த குடில்...
வாசிப்பதோ கூர்மையான அறிவால் செய்த குயில்...
உலகம் நோக்கி அடுக்கு மொழி பேசியதை எங்களுக்காய் போராடும் கூட்டமென்றே நம்பினோம், குடிசையிலே யாம் வாழ, மாடிவிட்டு மொத்தையில் குளுகுளு அறையிலே வாழும் பொதுவுடைமை பேசும் கூட்டமது....
எங்கே டா அந்த சோசலிசப் பேர்வழிகள்?...
தனது சாதியென்று தலையில் வைத்தாடும் தலைவலிகள்??....
இழுத்து வாருங்களடா அவர்களை....
நாம் சுவாசிக்கும் காற்றைச் சுவாசித்து, இந்த கூவ நாற்றத்திலே, இந்தக் கொசுக்கடியில் வாழ்ந்துதான் பார்க்கட்டும்....
இழுத்து வாருங்களடா அவர்களை....
உடல், உடையென யாவும் அழுக்குப் படிந்த நமக்காகப் போராடுகிறோம் என்றே கூறி அழுக்குப் படியாத ஆடையணிந்து வெள்ளையாய் திரியும் கொள்ளைக்காரத் துரோகிகளை இழுத்து வாருங்களடா....
நெற்றியிலே இனத்துரோகி என்றே பச்சை குத்தியே கழுதை மேலேற்றி அனுப்பி வைப்போம்......