காதலா காமமா

அன்பே
உன் முகவரி என்னவென்று
அறிந்தது இல்லை! இருந்தும்
என் முழுவரியும் நீயாகினாய்!!,

மேகமாக உன்னிடம்
சேர நினைத்தேன் ஆனால்
மோகம் கொள்ளவில்லை,

விரலும் விரலும் இதுவரை
இனைந்தது இல்லை! இருந்தும்
விழிகள் மோதாமல் இருந்தது இல்லை,

இதழும் இதழும் இதுவரை
ஒன்றாகவில்லை! இருந்தும்
இதயம் ஒன்றாக நினைத்தது காதலில்,


நிழலின் நிறம் கூட இதுவரை
கண்டதில்லை இருந்தும்
நினைவுகள் தீண்டாமல்
இருந்தது இல்லை,

உடலின் மீது இதுவரை
உணர்வுகள் கொண்டதில்லை இருந்தும்
உயிரில் உயிர் கலந்தது!!,

முத்தக் காற்றினை இதுவரை
தீண்டியது இல்லை! இருந்தும்
மூச்சுக் காற்றினை தேடாமல்
இருந்தது இல்லை!!,


எண்ணங்களை மட்டுமே வைத்து
எழுதி வருகிறேன்
"காதல் காவியம்" ஒன்று!
என்னவென்று தெரியாத சிலர்
அதனை அழைக்கிறார்கள்
காமம் என்று...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (6-Apr-17, 5:06 pm)
பார்வை : 315

மேலே