ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சொல்லித் தருகின்றன
சிரிப்பதற்கு
மலர்கள் !
காணாமல் போகும்
கவலைகள்
ரசியுங்கள் இயற்கை !
தண்ணீர் ஊற்றவில்லை
மரம் வைத்தவன்
காப்பாற்றியது மழை !
வீட்டிற்கு வெளியே தொடங்கி
அலுவலகத்தின் வெளியே முடிகின்றது
கன்னியின் அலைபேசி உரையாடல் !
முடிவு செய்கின்றது
அலைபேசியின் அகலம்
அந்தஸ்து !
வளைக்கலாம்
இரும்பையும்
தீயிலிட்டால் !