இதுதான் காதலா

ஒருவர் மனதில்
கருவாகி

பின் இருவர் மனதிலும்
உருவாகி

முக்காலத்திலும்
ஒருவரையொருவர்
நினைத்து

தேவ மானுட விலங்கு நரக
என நாற்கதியிலும் இது
தோன்றி

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
என ஐம்புலன்களிலும் கலந்து

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என ஆறு பகைகளை அகற்றி

அறம், பொருள், இன்பம், அன்பு, புகழ், மதிப்பு, மறுமை எனும் ஏழுவகை
பேறுகளையும் பெற்று

குறள், செவிடு, மூங்கை,
கூன், மருள், குருடு, மா, உறுப்பிலாப்பிண்டம்
எனும் எட்டுவகை உடற்குறைகளையும்
பொருட்படுத்தாமல்

சிங்காரம், வீரம், நகை, சாந்தம், கருணை, குற்சை, அற்புதம், பயம், கோபம்,
என நவரசங்களையும் ஊற்றி
என்றும் பிரியாமல் வாழ்வதே காதலா....

எழுதியவர் : செல்வமுத்து.M (8-Apr-17, 3:51 am)
பார்வை : 347

மேலே