கஞ்சிக்கலசம் சுமந்து போறவளே

கஞ்சிக்கலசம் சுமந்து போறவளே
கட்டழகி நில்லுபுள்ள
கண்ணுரெண்டு வேர்க்குதடி
கண்டுக்காம நீ போனா..!

அக்கம்பக்கம் ஆளிருக்கு ஆச மச்சா
ஆத்துப்பக்கம் வந்துடுங்க
ஆசையா சமைச்சு நானு
அயிரமீனு எடுத்துவந்த..!

கோவப்பழ உதட்ட வச்சிட்டு
கொஞ்சாம போறியே என்னபுள்ள
குசும்பு பண்ண சொல்லுதென்ன
அந்த கொசுவத்த கொஞ்ச நிக்கச்சொல்லு..!

ஆசையா பேசி ஆளமயக்குற அழகுமச்சா
அம்புட்டு ஆசையும் எனக்குமிருக்கு
ஊரு சனம் உத்துபாக்குமுங்க..!
இப்ப கொஞ்ச தள்ளி இருங்க..!

காத்திருந்து காத்திருந்து
காலு ரெண்டு நோகுதடி
கண்ணழகி நில்லுபுள்ள
களத்துமேடு காத்திருக்கு

கண்ணால கடத்தாதீங்க
மீசைய முறுக்கி இழுக்காதீங்க
ஆடிமாச போகட்டுங்க..!
அப்புறம் அள்ளி என்ன அணைச்சிடுங்க..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (8-Apr-17, 5:58 pm)
பார்வை : 103

மேலே