உன் நினைவாலே 3

காய்ந்த
கண்ணீர் துளிகள்
என் இமைகளில் ஒட்டிக்கிடக்கின்றன...

உன்னை காணாமல்
அவையும் இங்கே வற்றிக்கிடக்கிறது...

என் வாழ்வின்
நிகழ்வுகளில்
நிஜங்கள் எல்லாம்
நலமாய் நகர்ந்தாலும்...

உன் நினைவுகள்
மட்டும்
இன்றும்
என் இதயம்
கிழித்தே தைக்கிறது...

உள்ளம் எல்லாம்
இனித்தாலும்...

என்
உயிரை பருகும்
உன் நினைவுகள்...

நிகழ்காலம்
மட்டும் அல்ல..

என் எதிர்காலமும் தான்..

உன் நினைவாலே...

எழுதியவர் : எம் அம்மு (10-Apr-17, 9:04 am)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 551

மேலே