மௌனமாகவே நீ இருந்திருக்கலாம் 555
அன்பே...
விண்ணில் களைந்து போன
மேகங்களை எண்ணி...
நீ கவலை
கொள்கிறாய்...
நீதான் என் வாழ்க்கை
என்று நினைத்த...
என் காதல் கோட்டை
நொறுங்கியதை நீ உணர்வாயா...
வாழும்வரை எனக்குள் சுக
நினைவுகளை தந்தவள் நீதானடி...
நத்தையை போல அதனால்தான்
நானும் சுமக்கிறேன்...
என்னில் உன்
நினைவுகளை...
நிஜத்தில் நான் தனிமைதான்
நீ இல்லாமல்...
உன் நினைவில் உறங்க
நினைத்தால்...
உறங்கவிடுவதில்லை
உன் நினைவுகள்...
இப்போது நினைக்கிறன்
என் அன்பே...
சில நேரங்களில் நீ
மௌனமாகவே இருந்திருக்கலாம்...
வலி உணர்ந்தால்தான்
வாழ்க்கையோ.....?