மாறிய உன் காதல் மரிக்காத என் காதல்
மாறிய சூழல்களினால் எனைப்பிரிந்த உன்னை
மறக்கும் மனத்தினையும் நான் பெறவில்லை.
மரிக்கும் தன்மையும் என்னுள் உள்ள உன் நினைவுகளுக்கு இல்லை.
மறக்கவும் முடியாமல், உன் நினைவுகளை மரிக்க வைக்கவும் முடியாமல்
மெழுகாய் உருகுகிறேன் மறுகுகிறேன் நான்!!!