சிரியா பூக்கள்
பால் வடியவேண்டிய முகத்தில் இன்று உதிரம் வழிந்தோடுவதேனோ?
பஞ்சு மெத்தையில் உறங்க வேண்டிய
பிஞ்சு உடல் இன்று கடின பாறையில் உறங்குவதேனோ?
விளையாடிய கலைப்பில் உறங்க வேண்டிய குழந்தைகள் துயில் கலைகையில் உயிர் இருக்குமா என்னும் ஐயம் கொண்டதேனோ?
புகைப்படம் எடுப்பது கூட அறியாமல் பீதியில் உயிரை காக்க கைகளை உயர்த்துவதேனோ?
மாற்றி மாற்றி கொஞ்ச வேண்டிய ரோஜா மலரை இன்று உயிர் பிழைக்குமா என்னும் பதட்டத்தில்
கை மாற்றி மாற்றி மருத்துவமனை அனுப்புவதேனோ?
உடலில் உயிர் மட்டும் மிச்சம் வைத்து
ரத்தமும் சதையுமாக சிதைந்து கிடப்பதேனோ?
உணவு வாங்கி வர சென்ற தந்தை வெகுநாட்களாகியும் வீடு திரும்பாததேனோ?
தாயின் கண்ணீர் இன்று தரையை கழுவுவதேனோ???
இந்த நிலை மாறுவது எப்போது?
மழலைகளின் புன்னகைப் பூ மலர்வது எப்போது?
நிம்மதியாக வாழ்வது எப்போது?
உதவியை எதிர்பார்த்து அவர்கள் அங்கே!
உதவ இயலாமல் நாம் இங்கே!
கொடுமையிலும் கொடுமை!!
இருப்பினும் அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய துடிக்கிறது இதயம்!!!
இனி இறைவனிடம் கைகளை ஏந்தி வேண்டுகையில் இவர்களையும் இணைத்திடுவோம்!!
இதுவே இப்போது நம்மால் இயன்ற உதவி!!
இதையாவது செய் மனமே!!!!