தெரிந்து கொள்வோம்

எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!.

ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!.

தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!.

பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!.

கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!.

உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!.

மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" என்றாராம்!.

ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!.

ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (13-Apr-17, 8:09 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : therinthu kolvum
பார்வை : 697

சிறந்த கட்டுரைகள்

மேலே