என்ன சொல்வேன் இவள் பேரழகை

நிலாசிற்பி தனது திறனை
நிரூபிக்க எழுந்தான் சிற்பம் வரைந்தான்
அவன் செதுக்கிய சிற்பமாய் இவள் முகம்

கோடையில் விளைந்த கொம்புத் தேன்
வனத்தில் பூத்த செம்மலர் ரோஜா
குடியிருக்கும் இவளிதழ் வீட்டுக்காய்
குடுமிச்சண்டை போட்டன
சண்டை இன்னும் ஓயவில்லை

கோபம்கொண்ட கொடி மகள்
முல்லைத் தாய் சண்டையினால்
அகன்று வந்தமர்ந்தாள்
இவள் இடையில்

தழுவவந்த காதலனை
தடுத்தாள் மலர்ப்பெண்
காதலியைத் தவிக்கவிட
நினைத்தான் வண்டன்
ஒழிந்த இடம் இவள் விழி ஓடை

விண்வீட்டில் வான்தாய்
மறுத்தாள் காதலை
மண்ணகம் இடம் பெயர்ந்த
மேகக் காதலர்
இவள் தலைவீட்டில்
கிரகப்பிரவேசம் நடத்தினர்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (13-Apr-17, 2:58 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 393

மேலே