உன் உபசரிப்புக்கு நன்றி

இதோடு மொத்தம்
ஐந்து முறை உன் வீட்டு நிலைக்கண்ணாடியை
பார்த்துவிட்டாய் !
உன்முகம் பார்க்க இரண்டுமுறை !
என் முகம் பார்க்க மூன்று முறை !
நீ தந்த தேநீர் சுவையாய்த்தான் இருந்தது -இருப்பினும்
நான் மிச்சம் வைத்த தேநீர் கோப்பையையை யாருக்கும்
தெரியாமல் நீ ஒளித்துவைத்ததும் எனக்கு தெரியாமல் இல்லை !

உன் குடும்பத்தாரின் உபசரிப்புக்கு நன்றி !
அடுத்த முறை நிச்சயமாய் உன்னை பெண் கேட்டு
வருவேன் என் குடும்பத்தாரோடு !

இந்த இரவு உடையிலும் நீ அவ்வளவு அழகு !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (13-Apr-17, 4:01 pm)
பார்வை : 160

மேலே