அழகின் வெளிப்பாடுகள்

அழகின் வெளிப்பாடுகள் !
கவிதை by: பூ.சுப்ரமணியன்

மலரின் அழகை
வட்டமிட்டு
பாடுகிறது வண்டு !

ஆதவனின் அழகை
சுட்டெரித்துக் காட்டும்
ஒளிக்கதிர்கள் !

மழையின் அழகை
வெளிப்படுத்துவது
சாரல் துளிகள் !

உண்மையின் அழகை
உணர்த்திக் காட்டுவது
உன்னத உயர்வு !

உழைப்பின் அழகை
வெளிக்காட்டுவது
வியர்வைத்துளிகள்!

உள்ளத்தின் அழகை
வெளிப்படுத்துவது
கவிதை வரிகள் !

அன்பின் அழகை
இன்பமுடன் காட்டுவது
குழந்தையின் குறும்பு !

இசையின் அழகை
இசைத்துக் காட்டுவது
ஏழு சுரங்கள் !

ஆண்டவனின் அழகை
உணர்த்துவது
அன்னையின் உறவு !

பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (13-Apr-17, 10:02 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 92

மேலே