குடைக்குள் கூரைக்குள் மழை

'' குடைக்குள் ( கூரைக்குள் ) மழை ''
சிலுசிலுவென ஓர் மழை துளி
கண்டேன் சொர்க்கத்தை
ஆழ்ந்த உறக்கத்தில்,
சில்லென நினைத்தது
மனமல்ல , தலையணை ....!
மனநிறைவில் அல்ல
மழையின் பொழிவில் .....!
குடைக்குள் மழையல்ல
ஏன் கூரைக்குள் .....!
நினைத்தது
மழையுடன்
மனமும் ...!
நொந்தது
நூல் ஆடையுடன்
மெல்லிய மனமும் ....!
மழையோ சிரித்தது
நானோ அழுதேன் ..!
மழையின் குளிரிலும்
கொழுந்து விட்டு
எரிந்தது மனம் ...!
அவன்மீது (ஆண்டவன் ) மீது ...!!
வினோ வி ....