எதிலும் திருப்தி அடையாத மானிடன்

இயற்கையை தன்னுடைமையாக்கி, அரசாங்கத்தின் பெயரால் அங்கீகாரம் தனக்குத் தானே வழங்கிக் கொண்டு,
தானே சிறந்தவனென்று குதிக்கிறானே இந்த அன்பற்ற மானிடன்...

தனக்கு மட்டுமே இந்த இயற்கையென்றே சொந்தம் கொண்டாடும் உரிமையை உனக்கு வழங்கியது யார் மானிடா?...

இயற்கையால் நிறைந்த உலகில் வந்து வாழ்ந்து செல்லவே உரிமையுண்டே தவிர எதையும் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை....

கடவுள்களின் பெயராலே கோயில்களை கட்டிக் கொண்டு, கோயில்களின் பெயராலே சொத்துகளை உடைமைகளாக்கி, வரி ஏய்ப்பு செய்து மக்களை ஏமாற்றும் மக்களாட்சி கண்டேன்....

இயற்கையின் வளத்தைச் சுரண்டித் தன் வளத்தைப் பெருக்கிய, பெருக்கிக் கொண்டிருக்கும் கூட்டமே என்று தான் உணர்வாயோ இயற்கையென்றாலே பொதுவுடைமையென்று??...

பூமியைச் சீரழித்து அழித்துவிட்டு இந்த மானிடன் செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கத் தயாராகிவிட்டான்...
அங்கே சென்று ஒழுங்காக வாழ்வானா???..
இல்லை...

இதே நிலையைத் தான் அங்கும் உருவாக்குவான்...
அடுத்து அடுத்த கிரகம் தேடிப் புறப்படுவான்...
எதிலும் திருப்தி அடையாத மானிடன் அவ்வளவு சீக்கிரம் நிலையான ஒரு வாழ்விடத்தை உருவாக்கி விடுவானா???.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Apr-17, 7:36 pm)
பார்வை : 624

மேலே