குறுங்கவிதைகள் - தத்துவம்

உண்மையை அறிந்து கொண்டால்
அறிவுக்கு இனி என்ன வேலை ?
கடவுளோடு கலந்து விட்டபின் ...............................(கடவுள் அதுவே,அதுவே உண்மை)



கடவுள்தந்த உறுப்புக்கள் அத்தனையும்
உன்னை உய்யவிக்க படைத்தான்
இதை மறந்து சோம்பித்திரிந்து வேற்றாய்
இருந்துவிட்டு அவன் வெறும் கல்லே என்று
தூற்றின் என்ன பயன்-கல்லில் இருந்து
இறைவன் காட்சி தந்தாலும் -நீ உழைத்தால்
உனக்கு உய்வுண்டு என்பான் ................................(உழைப்பில் அவன்)



உலகையும் உன்னையும் படைத்தோனை
நீ இல்லை என்று கூறுகிறாய் -அவன் படைத்த
பொருளைக் கொண்டே ஏதேதோ செய்து
இவை என் படைப்பு என்று இறுமாப்பில் இருக்கின்றாய்
நீ இப்படியே இருந்தால் அவனை எட்டுவது எப்போது ? (கடவுளை எப்போது அறிவாய்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Apr-17, 1:52 pm)
பார்வை : 90

மேலே