வாழ்வதிகாரம் ---முஹம்மத் ஸர்பான்

விதிகள் என்றும் சதிகள் செய்வதால் தான் வாழ்க்கையில் ஆயிரம் பிளவுகள் அந்த பிளவுகளின்
காயங்கள் சில ஆறிவிடும் பல மரணம் வரை ஆறாமல் வடு விடும்.கூண்டிற்குள் இருக்கும் வரை வானில் அழகை புரிந்து கொள்ள முடியாத பறவைகளுக்கு அடிமை வாழ்க்கை கூட ராஜ வாழ்க்கை தான்.,ஒரு முறை தான் வாழ்க்கை அந்த ஒருமுறையிலும் பல கோடி நினைவுகளும் கனவுகளும் இறைவன் வகுத்த விதியின் பாதையில் உள்ளங்களை ஆள்கின்றது.

அந்த கனவுகளில் ஒன்றை கூட நிஜமாக்காத மனிதன் உயிரிருந்தும் கல்லறைக்குஒப்பானவன்.செல்லும் இடமெல்லாம் நிலவைக் காணும் கண்கள் எளிதாக ஒளியை கண்டு கொள்ளலாம் ஆனாலும் அந்த வெளிச்சம் எம்மிடம் என்ன சொல்ல விளைகிறது என்பதை பறவை போல் நீயும் நானும் கூண்டை விட்டு வாழ்க்கை எனும் உண்மையான உலகில் வாழத்தொடங்கும் போதே உணர்ந்து கொள்ளலாம்.

தாயின் கருவறையில் கற்றுக் கொண்ட உணர்வுகளை கல்லறை தூங்கும் முன் நீ கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதர்களிடமும் பகிர்ந்து கொள்! அங்கே தாய்மையும் புனிதமாகிறது; உன் உள்ளமும் தூய்மையாகிறது.பூக்களை கண்களால் பார்த்து கற்பழிக்கத்தெரிந்த மனிதர்களுக்கு அந்த பூக்களோடு வண்டுகள் போல் ஒட்டி உறவாட தெரிவதில்லை;பச்சைக் கிளிகளும் முயற்சி செய்து வளர்ப்பவன் தாய்மொழியை கற்றுக் கொள்கிறது.நன்றிகெட்ட நாம் தான் சொந்த மொழி இருந்தும் அதனை தட்டிக் கழித்து விட்டு அடுத்த கரையை நோக்கி நகர்கின்றோம்.

தலையை இழந்த போது தான் செவ்விளனியின் பிறவிக் கடன்தீர்கிறது;ஆயிரம் துப்பாக்கிச் சூடுகள் வாங்கிய பின்னும் புல்லாங்குழல் இசைப்பவன் மனநிலையை பொறுத்து தன்னை நித்தம் நித்தம் மாற்றிக் கொள்கிறது;மீன்களுக்கு கூட தூண்டில் தான் போராடும் போர்க்களம்;தியாகம் என்ற ஒன்றால் தான் வாழ்க்கையில் உனக்குள்ள புதைந்து கிடைக்கும் சாதனைகளை ஆயும் முடியும் முன் இந்த உலகிற்கு நிரூபனம் செய்யலாம்.கண்ணீரை துடைப்பதற்கு கைக்குட்டை தேவையில்லை உனக்குள் சிமிட்டிக் கொண்டிருக்கும் இரு இமைகளும் உனக்கு நட்புள்ள கைக்குட்டை தான்..,

இதனை புரிந்து கொள்ளாத வரை வாழும் வாழ்க்கையில் இன்பம் கூட துன்பமாகத்தான் வரிசை போட்டுக் கொண்டிருக்கும்.மீண்டுமொரு முறை சொல்கிறேன்



"ஒரு முறை தான் வாழ்க்கை
அந்த மாபெரும் தவணையில்
நீ பலமுறை தோற்றாலும்
ஒரு முறை வென்று காட்டி விடு!"

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (15-Apr-17, 10:37 am)
பார்வை : 160

மேலே