பிராடக்ட் குவாலிட்டி

பேங்க் மேனேஜர் அதிர்ச்சியில் உறைந்தார்.

“என்ன சார் இது! ஒரு கோடி ரூபாய் லோனை ஒரே மாசத்துல ஒரே இன்ஸ்டால்மெண்ட்ல முழுசா ரீ பே பண்றீங்க?”

“செய்யற தொழில்ல பிராடக்ட் குவாலிட்டி நல்லா இருந்தா இதொண்ணும் கஷ்டமே இல்லை”

“பிரிண்டிங் பிரஸ்ஸுக்காக லோன் வாங்கினீங்க. என்னதான் குவாலிட்டின்னாலும் பிரிண்டிங்ல ஒரே மாசத்துல ஒரு கோடி ரூபாய் லோனைக் கட்ட முடியுமா?”

“முடியும் சார், பிராடக்ட் குவாலிட்டி நல்லா இருந்தா முடியும்”

”அப்படி என்ன பொல்லாத பிராடக்ட் குவாலிட்டி?”

“அடுத்த மாசம் சொல்றேன்”

ஒரு மாசம் போயிற்று.

மண்டை வெடித்து விடும் போலக் காத்திருந்த மேனேஜர் லோன் வாங்கியவரை சந்தித்து “இப்பவாவது சொல்லுங்களேன்” என்றார்.

“நான் கொடுத்த பணம் பூரா சர்க்குலேஷன்ல போயிடுச்சா?”

“ம்ம் ஆச்சு”

“எதும் கம்ப்ளெய்ண்ட் இல்லையே?”

“இல்லையே? ஏன்?”

“அதான் என் பிராடக்ட் குவாலிட்டி”

“புரியல்லை. இதுல எங்கேர்ந்து பிராடக்ட் குவாலிட்டி வந்தது?”

“நான் கொடுத்தது பூரா என் பிரஸ்ஸுல அடிச்ச நோட்டு. எவ்வளவு சுப்பீரியர் குவாலிட்டியா இருந்தா இதுவரைக்கும் கம்ப்ளெய்ண்ட்டே வராம இருக்கும்?”


  • எழுதியவர் : செல்வமணி (பகிர்வு)
  • நாள் : 18-Apr-17, 11:39 pm
  • சேர்த்தது : செல்வமணி
  • பார்வை : 251
Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே