ராமு-சோமு உரையாடல்- என்ன பெரிசா குப்பை கொட்டிட்ட

சோமு : ஐயா , ராமு ஐயா, ரொம்ப நாளா ஒங்கள
ஒன்னு கேக்கணும்னு நினச்சேன் , இன்னிக்கு தான்
அதுக்கு வேல வந்ததுன்னு நெனக்கிறேன் ஐயா .................

ராமு : அப்படி என்னடா உனக்கு புரியாத ஒரு புதிர்......
சொல்லு பாப்போம் .....................................

சோமு : என் பொஞ்சாதி இன்னிக்கு என்ன கோபமோ தெரியல
............."ஆமான் இத்தனை நாளா என்ன குப்பைகொட்டிட்ட
இனிமே செல்வம் கோழிச்சு வாழ ...................போ போ ஆற
வேலைய பாருன்னு சொல்லிட்டு போய்ட்டா.................
மனசு கஷ்டப் படுது ......................... அதாங்க .....கேக்க தோணிச்சு ...ராமு : டேய் சோமு .............. இது பாட்டன்-முப்பாட்டன் காலத்துலேந்து
வழி வழியா வீட்டு பொம்பளைங்க , கோபத்துல உடற ஒரு வகை
வசைச்சொல் எனலாம் ......................அதாவது தாங்க ரொம்ப நாளா
மனஸிலேயே வெச்சிண்டு அது நேராவேரலேனா , கோபப்பட்டு
தெரிகிற வசவு................உதாரணம் , புது நாகநாட்டு, வீட புதிப்பிக்க,
இல்லாட்டி புது வீடு வாங்கல்................ இப்படினு ஏகப்பட்ட ஆதங்கங்கள்
மனசில் சுமந்து அதா புருஷன் கிட்ட சொல்லி அவன் ஒன்னும் செய்யலேன்னா
அப்போது ஏதாவது சால்ஜாக்கு சொல்லி தப்பிக்க பார்த்தா, பெண் ஜாதி உடற
ஒரு வெசவுதான் இந்த குப்பைகொட்டறது .................அதாவது , பழையன
களைத்து புதியதை வாங்குதல்/கூட்டுதல் இதற்க்கு பொருள் .....

ஆமான், ஒனக்கு என்னடா குறை ஒன பொஞ்சாதி என் இப்படி சொன்னா >?

சோமு : ஐயா , என் பொஞ்சாதி புதுசா , ஏதோ வெளிநாடு சுற்றுலா போகணும்னு
ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கு, இன்னிக்கு எங்க கல்யாணம் ஆகி
முப்பது வருஷம் ஆச்சுங்க .............இன்னிக்கு திருப்பி அந்த கோரிக்கை
வெக்க நான் சொன்னேன் அடிப்பொடி நம்ம ஊரிலேயே பாக்கவேண்டிய
இடங்கள் இருக்க முதல அத பாப்போம், அப்புறம் அந்த வெளி நாடு பத்தி
யோசிக்கலாம்னேன்.............. போத்திட்டு வந்துச்சுங்க ஆத்திரம் அவளுக்கு

"அம்மான், முப்பது வருஷம் ஒன்னும் குப்பைகொட்டலா இனிமே
நீ என்ன குப்பைகொட்ட .............நான் ஒரு சிணுங்கி ஒண்ணா போய்

கேட்டேன் பாருன்னு சொல்லிப்புடுச்சிங்க ...................

ராமு வருத்தப்படாத ...................... அவ கேட்டதுல தப்பு இல்ல............ நீ சொன்னதுலேயும்
தப்பு இல்ல............ கவலைவேண்டாம் ..................நான் அடுத்த வாரம்
சிங்கப்பூர் போகச்செ ,உங்க ரெண்டு போரையும் கூட்டிட்டு போறேன்
என் சிலவுல ................இப்ப போய் அவ கிட்ட சொல்லு ..........................
இந்த செய்தியை, என்ன சொல்லற பாரு.........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


சோமு " ஐயா ராமு ஐயா , என ஒங்க பிள்ளை மாறினு நீங்க சொல்லறது நிஜமுங்க.............


Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே