ராமு-சோமு உரையாடல் - நாய் ஒன்று சொல்லித்தந்த பாடம் சிந்திக்க, சிரிக்க

ராமு- சோமு உரையாடல்
-----------------------------------------

ராமு : டேய் சோமு , என்ன உன் புதிய கைப் பேசி என்ன சொல்லுது
அப்படியே அதனையே பாத்துட்டு நிக்கற ...........என்னப்பா விஷயம் ?

சோமு : ஐயா , அதுல நண்பன் ஒருத்தன் வாட்ஸாப்ப் ல வீடியோ
அனுப்பிச்சான், அதா பாத்து அப்படியே ஸ்தம்பிச்சுட்டு
போய்ட்டேன் ஐயா ........................

ராமு : அப்படி என்ன சமாச்சாரம் அப்பா?.....................

சோமு :அந்த வீடியோ ல ஐயா ஒரு நாய் , தன இறந்துபோன
குட்டிய வாயில் கவ்விக்கொண்டு போய், ஒரு
ஒதுக்குப்புறத்துல , கீழே கடத்தி, மண்ணை தோண்டி எடுத்து
அந்த சிறு பள்ளத்தில் தன இறந்த குட்டியை கிடத்தி
மண் தூற்றி புடைக்குது, பின் அங்கேயே கொஞ்சம் நின்று
கண்ணீர் விடுது ஐயா ........................இதை பாத்து நான் அசந்து போய்ட்டேன்
ஐயா, நன்றி உள்ள நாய் என்று சொல்லுவார்கள் இது இப்படி மனிதரைபோல்
நடந்து கொள்ளும் விதம் ........................மிருகத்துக்கு அந்த மேலறிவு
உண்டுன்னு காட்டுது ஐயா ........................ யோசித்தால் ஐயா , இந்த
நாய்க்கு மனிதனை விட சுற்றுப்புற சூழலைக் காப்பாற்றும் அறிவு உள்ளது
தெளிவாகிறது..................ஐயா நாய்கள் சிறுநீர் களைத்து அந்த இடத்தில
காலால் மண்ணை வாரி போடும் பார்த்திருக்கிறேன்....... மனிதன்
பொது இடங்களில் சிறுநீர் கழித்துவிட்டு வெட்கமில்லாமல் போவதையும்
பார்க்கிறோம் .............................தட்டி கேட்டால் சண்டைக்கும் வருவார் இவர்கள்

என்னத்த சொல்ல....................... நொந்து போய்விடுகிறோம் இவற்றைப் பார்த்து .....!!!!!!!!!!!!!!!!

ராமு : சோமு நம்ம ஊர் பள்ளியிலே இதை நீ ஏன் சிறுவருக்கு எடுத்து கூற கூடாது
நான் வருகிறேன் வா......... நம் சிறுவர்களை நல்ல சிவிக் சென்ஸ் உள்ளவர்களாய்
ஆக்கிட முயல்வோம்.................... இந்த உன் வீடியோ மூலம் .................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Apr-17, 1:48 pm)
பார்வை : 206

சிறந்த நகைச்சுவைகள்

மேலே