வல்லரசு இந்தியா


என்றுமே இந்தியா வல்லரசுதான்

என்றுமே இந்தியா வளமான நாடு தான்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்

என்றுரைத்தான் என் தமிழன் பாட்டில்..

வரலாற்று சான்றுகள் பல உண்டு .

வள்ளல்கள் வழ்ந்த திருநாடு

எத்தனையோ கோட்டைகள் இங்குண்டு

எல்லாமே இந்தியாவின் சீர்கொண்டு

ஆரியபட்டர் அழகாய் கணித்தான் அன்று

அத்தனையும் அவன் அறிவின் திறம் கொண்டு

எத்தனையோ விண்கலம் வானில் இன்று

அத்தனையும் செலவின்றி அறிந்தான் அன்று

திண்ணையிலே அமர்ந்து நவகோளையும்

பல யுகங்களையும் கணித்தான் அன்று

இன்றைய இணையம்

அன்றைய பாரத போரின் பளிங்கு கண்ணாடி

மருத்துவம் முதல் வானியல் வரை

அறிவியல் முதல் ஆன்மீகம் வரை

எல்லாமே இந்தியன் அன்றே அறிந்தது

என்பதாலே அன்றும்,இன்றும்,என்றும்,

இந்தியா வல்லரசுதான்.




















எழுதியவர் : சுந்தரவரதன்.ve (15-Jul-11, 10:44 pm)
சேர்த்தது : sundaravaradan.v.
பார்வை : 2716

மேலே