காதலியே...
உன்னைக் காணும் பொது மட்டும் தான்
நான் காதல் கொள்கிறேன்.
உன்னை காணாத பொழுதுகள்
நான் மரணித்துப் போவதினால்.
என் வீட்டு கண்ணாடியில்
படிந்த தூசுக்களைக் கூட
துடைக்க மறுக்கின்றேன்.
உன் பெயர் படிந்திருப்பதால்.
அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தால்
நிலவில் நீ , முழு நிலாவாய்,
வெளிர் பவுர்ணமியாய் ,
வெளிச்சமாய் , அழகாய்.
என்னிலும் நீயே
என் எண்ணத்திலும் நீயே.
கத்தையாய் பணமிருந்தும்- அந்த
ஒத்தை ரூபாயை கொடுக்க மனம் ஒத்தவில்லை
கொடுத்தது நீ என்பதால்.
பல முறை யோசித்து இருக்கிறேன்.
நெஞ்சு குழிக்குள்
நீ புத்தகங்களை
வைத்து அணைக்கையில்
அதில் நானும் ஒன்றாய்
மாறிவிடவேண்டுமென்று.
ஆசைகளை துறந்த புத்தன் கூட
ஐந்து நிமிடத்திற்கு முன் உன்னை கண்டிருந்தால்
அவன் போனது போதி மரமாய் இருக்காது.
போதை மயமாய் இருக்கும்.
பாலைவனத்திலும் பால் சுரக்கும்
உன் பாதங்கள் பட்டால்.......
ஆனாலும்.....
உன்னை அழகாய் தந்த இறைவன்
கொஞ்சம் இரும்பாய் படைத்துவிட்டான்
உன் இதயத்தை.......