தூக்கம் தொலைக்காதீர் - சிஎம் ஜேசு

காலம் நம் கட்டுப்பாட்டில் இல்லை
அதனால் தூக்கம் தொலைக்காதீர்
மாறாத துக்கம் மனதை பலகீன படுத்தும்
அதனால் தூக்கம் தொலைக்காதீர்
மதிமயங்கிய காமத்தின்காதல் மனத்தை வேரறுக்கும்
அதனால் தூக்கம் தொலைக்காதீர்
ஓடித்திருந்து வாடிஅலைந்தால் உள்ளம் கெட்டுப்போகும்
அதனால் தூக்கம் தொலைக்காதீர்
தொலைவைத் தேடி தொல்லைகள் கூடினால் உடல் துவளும்
அதனால் தூக்கம் தொலைக்காதீர்
தூக்கம் உடலின் ஓய்வுக்கு மட்டும் அன்று - அது
தூய உள்ளத்துக்கான மானிடரின் மறு பிறப்பு
தூக்கம் தொலைக்காதீர் அமைதியான உலகை ஆள