வெப்ப அலை
வானிலை அறிக்கையில் வெப்ப அலை -அதனால்
வெளியில் போகாத நிலை !
உடலில் வெப்ப நிலை -அதனால்
நோயின் உக்கிர நிலை !
சமூகத்தில் சாதியப்படி நிலை -அதனால்
மனிதனை மனிதன் சுரண்டும் நிலை !
நூற்றாண்டுகள் சாதிய ஆதிக்க நிலை -அதனால்
பெரும்பான்மைக்கு கல்வியிலாநிலை!
பொருளாதாரத்தில் ஏற்றயிறக்க நிலை -அதனால்
வறுமையின் தாண்டவ நிலை!
தற்பொழுது வணிக நிலை -இலவச
கல்வி மருத்துவமில்லா நிலை !
பெரும் நிறுவனங்களுக்கு லாபநிலை -நாட்டில்
இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் அவலநிலை!
இந்த வெப்பநிலைகள் தனிந்து - வாராதோ
சமத்துவம் விரைந்து !