பிதற்றல்

புரையோடிக் கிடக்கும்
நாவுகளில்
மிஞ்சியிருக்கும்
வார்த்தைகளை
தேடுகிறேன்....

குறிக்கோள்களற்ற
வெற்று வார்த்தைகளில்
மனதின் மதில்கள்
சரிந்து
விழுகிறது ....

ஒற்றைப்பிராணியாய்
தெருவில்
பிதற்றியபடி
அலைகிறேன்....

மிஞ்சியுள்ள
வார்த்தைகளும்
தற்போது
உபயோகத்தில்
இல்லை....

...கௌசல்யா.....

எழுதியவர் : கௌசல்யா (20-Apr-17, 5:45 pm)
பார்வை : 55

மேலே