நொடிப்பொழுதுகள் எனக்காய் தரும் அவகாசம்
வயோதிகத்தின் முதிர்ச்சிகாரணமாக கைவிரல் நடுக்கத்தில் சிந்தும்
சில தேநீர் துளிகள்...
நிர்பந்தம் காரணமாய் எவருடனோ சிலநேரம் உரையாடும்போது
எண்ணிலடங்கா வார்த்தைகளினூடே கசியும் நீண்டநேர அமைதி...
கார்மேகம்சூழ எனை முத்தமிடும் மழைத்துளிகளை
வான்நோக்கி விழிமூடி தலை உயர்த்தி நான் இரசிக்கும் பொழுதுகள்...
தெம்மாங்குப் பாட்டு தெருவோரம் தவளும்போது
தனைமறந்து என் உதடுகள் அசையும்பொழுதுகள்...
இதுபோன்றே ஏதேனும் சிலநொடிகள் வாய்த்து விடுகின்றன
சொல்ல முடியாதவற்றை நமக்குள்ளே பகிர்ந்துகொள்ள...