சம்பந்தம் கவிதை

சம்பந்தம் இல்லாதவர்
சம்பந்தம் இல்லாததைப் பேசினார்
சம்பந்தம் உள்ளவர் அருகில்
இல்லாமலேயே அவரைப் பற்றி பேசுவது
எனக்கு சம்பந்தம் இல்லையென்று சொன்னார்.
யாருக்கு எது சம்பந்தம் என தெரியாது?
இருவருமே. எந்த சம்பந்தம்
இல்லாத ஒன்றைப் பற்றி பேசினார்கள்.
சம்பந்தம் இருந்தவரை அவரைப் பற்றி
சம்பந்தப்பட்டவர்கள் இவ்வளவு
விளாவாரியாகப் பேசியது கிடையாது என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னார்.
சம்பந்தம் இன்றில்லை நேற்று இருந்தார்.
அது சம்பந்தமாகவே
அவர்கள் பேசினார்கள் என்று
சம்பந்தப்பட்டவர் சொன்னபோது தான்
சம்பந்தம் உள்ளது எல்லாமே புரிந்தது.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (21-Apr-17, 9:27 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 151

மேலே